சத்து நிறைந்த பச்சை பட்டாணி சூப் செய்யும் முறை

Date:

நார்ச்சத்து நிறைந்த பச்சை பட்டாணி சூப் தினமும் அல்லது வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பச்சை பட்டாணி சாப்பிடுபவர்களுக்கு நார்ச்சத்து அதிகம் கிடைப்பதால் செரிமான கோளாறுகள் ஏதும் ஏற்படாமல் தடுக்கிறது.

தேவையான பொருட்கள்

பச்சை பட்டாணி – 1 கப்,
பெரிய வெங்காயம் – 1,
பிரிஞ்சி இலை – 1,
பச்சைமிளகாய் – 1,
பூண்டு – 2 பல்,
வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு – சிறிது,
பால் – 1/2 கப்.

செய்முறை

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் பூண்டு, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கிய பின்னர் பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்பு பச்சைப் பட்டாணியை வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேகவைக்கவும். பச்சை பட்டாணி வெந்ததும் ஆறவைத்து அதில் இருந்து பச்சைமிளகாய், பிரிஞ்சி இலையை எடுத்து விட்டு பட்டாணியை மிக்சியில் போட்டு அரைக்கவும். இத்துடன் பால் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு உப்பு, மிளகுத்தூள் தூவி சூடாக பரிமாறவும். சத்தான பச்சை பட்டாணி சூப் ரெடி.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பதவியேற்பு விழாவில் தமிழை 3ஆம் இடத்திற்கு தள்ளிய விஜய்!

தமிழக முதல்வராக இன்று தவெக தலைவர் விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்...

“நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோகம் இழைத்த ஒட்டுண்ணிக் கட்சி காங்கிரஸ்” – பிரதமர் மோடி

துரோகம் இழைக்க மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும் என்றும், தனது நீண்டகால...

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்