வெள்ளிக்கிழமை முதல் கிளிநொச்சி நகரம் முழுமையாக முடங்குகிறது!

Date:

கிளிநொச்சி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு கொரோனாப் பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றமையை
தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் முகமாக கிளிநொச்சி நகர வர்த்தகர்கள்
அனைவரும் எதிவரும் 20.08.2021 வெள்ளிக் கிழமை முதல் 25.08.2021 வரை
தங்களது வர்த்தக நிலையங்களை பூட்டுவதற்கு தீர்மானித்துள்ளனர் என
கிளிநொச்சி நகர வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் இன்று(18) மாலை கிளிநொச்சி ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகச்
சந்திப்பில் வர்த்தக சங்கத்தின் தலைவர் இ.விஜயசிங்கம், செயலாளர் ச.பாஸ்கரன், பொருளாளர் க.ஆனந்தவடிவேல் ஆகியோர் கலந்துகொண்டு இவ்வறித்தலை
தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்

நாளுக்கு நாள் கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து
வருகின்றனர். நேற்று (17) மாத்திரம் 257 தொற்றாளர்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளனர். இதுவொரு ஆபத்தான நிலைமை எனவே வர்த்தகர்களாகிய நாம்
அனைவரும் ஒன்றிணைந்து எமது வர்த்தக நிலையங்களை சில நாட்களுக்கு பூட்டு
தொற்று பரவுவதனை கட்டுப்படுத்த தீர்மானித்துள்ளோம்.

அந்த வகையில் எதிவரும் 20 ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை மருந்தகங்கள்,
வாகன திருத்தகங்கள் தவிர ஏனைய அனைத்து வியாபார நிலையங்களையும்
பூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக் காலப்பகுதிகளில் வர்த்தகர்கள் அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள கொவிட் 19 பரிசோதனை மேற்கொள்ளும் இடங்களில் தங்களை பரிசோதித்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவித்துள்ளதோடு, எமது மக்களை பாதுகாப்பதற்கு அனைத்து வர்த்தகர்களையும் பூரண ஒத்துழைப்பு வழங்கியுதவுமாறும் கேட்டுக்கொள்வதாக கிளிநொச்சி நகர வர்த்தக சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக்...

இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்!

பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்