10 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 60 வயதான முதியவர் கைதாகினார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அளுத்கம, சினவத்தை பகுதியை சேர்ந்த சிறுமியே துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்.
கணேகம பகுதியிலுள்ள தனது வீட்டில் வைத்து 60 வயதான முதியவர், சிறுமியை பல முறை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியுள்ளார். அவர் சிறுமியின் தந்தையின் மாமா ஆவார்.
தனது வீட்டிற்கு விளையாட வரும் சிறுமியை அவர் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார். கடந்த 4 மாதங்களில் பலமுறை இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
தகவல் வெளியானதையடுத்து பிரதேசத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாகியிருந்தார். நேற்று (17) தனது சட்டத்தரணி ஊடாக அளுத்கம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
கொழும்பில் தலைமறைவாக இருந்த நபர், தனியார் வைத்தியசாலையில் மேற்கொண்ட பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து சட்டத்தரணி ஊடாக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
இதையடுத்து, தர்ஹா நகர் இராணுவ முகாமிலுள்ள இடைத்தங்கல் சிகிச்சை நிலையத்திற்கு அவர் அனுப்பப்பட்டார்.