சியோமி நிறுவனம் ரெட்மி பிராண்டிங்கில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் புது ஸ்மார்ட்போனிற்கான டீசர்களையும் வெளியிட்டு வருகிறது. புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி 10 என அழைக்கப்படுகிறது.
அதன்படி ரெட்மி 10 மாடலுக்கான புது டீசரை சியோமி வெளியிட்டுள்ளது. டீசரில் ரெட்மி 10 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரெட்மி 10 வெளியீட்டு திகதியை குறிப்பிடாமல், இந்த பிராசஸருடன் வெளியாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போனும் ரெட்மி 10 தான் என சியோமி தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கேமிங் அம்சங்களை சார்ந்து உருவாகும் என்றும் சியோமி வெளியிட்டுள்ள டீசர்களில் தெரியவந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1