26.3 C
Jaffna
December 17, 2024
Pagetamil
சினிமா

ஜாமீன் கோரி மீரா மிதுன் மனு!

வாய்தவறி பட்டியலினத்தவரை பற்றி பேசிட்டேன்: ஜாமீன் கோரி மீரா மிதுன் மனு!

தமிழ் திரையுலகில் பட்டியலிடப்பட்ட மக்கள் பற்றி தரக்குறைவாக பேசியது தொடர்பாக நடிகை மீரா மிதுன் மீது புகார்கள் குவிந்தது. பின் போலீசார் மீரா மீது வழக்கு பதிவு செய்தார்கள்.

விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியும் வராமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். மீரா மிதுனை ஆகஸ்ட் 27 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதன் பிறகு மீரா மிதுனை புழல் சிறையில் அடைந்தனர். அவர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்ற எண்.

தற்போது ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் மீரா மிதுன்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

என்னை பற்றி அவதூறாக செய்தி பரப்பியதால் மன உளைச்சல் ஏற்படுகிறது. அந்த மன உளைச்சலில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசினேன். அப்பொழுது வாய்தவறி பட்டியலிடப்பட்ட சமுதாயத்தை பற்றி பேசிவிட்டேன் என கூறினார்.

இதற்கிடையே மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்குமாறு யூடியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” – நடிகை டாப்ஸி

Pagetamil

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

‘புஷ்பா 2’ வில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் நவ.24 இல் வெளியீடு

Pagetamil

Leave a Comment