Pagetamil
சினிமா

பாரதி கண்ணம்மாவில் இருந்து திடீரென வெளியேறியது ஏன்? அகிலனின் பதில்

டிஆர்பியில் முன்னணியில் இருந்து வரும் பாரதி கண்ணம்மாவில் இருந்து திடீரென வெளியேறியது ஏன் என தெரிந்துகொள்ள அகிலனை தொடர்புகொண்ட போது அவர் கூறியது இதுதான். “நான் பாரதி கண்ணம்மாவில் நடிக்க தொடங்கி மூன்று வருடங்கள் ஆகி விட்டது. சினிமாவுக்குள் வர வேண்டும் எண்று தான் நான் நடிப்பையே தேர்வு செய்தேன். பாரதி கண்ணம்மா எனக்கு ஒரு நல்ல பாதையை வகுத்து கொடுத்தது. அதை நான் சரியாக பயன்படுத்திக்கொண்டேன்.”
“விஷால் 31 படத்தில் நடித்து வருகிறேன்.

அதன் ஷூட்டிங் இறுதி கட்டத்தில் இருக்கிறது. அதில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறேன். பிரபுதேவாவின் பகீரா படத்தில் நடித்து முடித்திருக்கிறேன். அந்த படம் தியேட்டர் திறந்ததும் ரிலீஸ் ஆகும். அடுத்து பீசா 3 படத்தில் நடித்து கொண்டிருக்கிறேன்.”
“அடுத்து இரண்டு பெரிய பட்ஜெட் ப்ரொஜெக்ட்டுகளில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறேன்”. அதில் ஒன்றில் நான் ஹீரோவாக நடிக்கிறேன். அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் தயாரிப்பு தரப்பு வெளியிடும்.

“இப்படி பல படங்களில் நடிப்பதால் பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கிற்கு டேட் கொடுக்க முடியவில்லை, அதனால் தான் வெளியேறினேன்” என அகிலன் கூறினார். மேலும் ஒரு வெப் சீரிஸிலும் அகிலன் நடிக்க போவதாக தெரிவித்தார். அவரை பாரதி கண்ணம்மாவில் மிஸ் செய்யும் ரசிகர்கள் இனி பெரிய திரையில் அவரை பார்த்து ரசிக்கலாம்.

இதையும் படியுங்கள்

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் – இது ‘ஹாலிவுட்’ லெவல்!

Pagetamil

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய கோரி ஹன்சிகா மனு

Pagetamil

‘திருமணமான ஆணுடன் தொடர்பு வைக்க மாட்டேன்’: ஜி.வி.பிரகாஷுடனான உறவை மறுக்கும் நடிகை திவ்யபாரதி!

Pagetamil

கார் விபத்தில் சிக்கி காயமடைந்த நடிகர் சோனு சூட் மனைவி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!