இனி வடிவேலுவை படங்களிலும் பார்க்கலாம்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Date:

சிம்பு தேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 24 எம் புலிகேசி படத்தில் நடித்தபோது ஏற்பட்ட பிரச்சனையால் வடிவேலு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு போட்டது. சமீபத்தில் பல காலம் கழித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வடிவேலு, உங்களுக்கு எல்லாம் ஓராண்டாக தான் லாக்டவுன். ஆனால் எனக்கோ பத்து வருஷமாகவே லாக்டவுன் என்று கூறி கண் கலங்கினார்.

தொடர்ந்து இம்சை அரசன் பட பிரச்சனையை தீர்க்க முயன்ற தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் முயற்சி தோல்வி அடைந்தது. அதை பார்த்த ரசிகர்களோ, இனி வடிவேலுவை படங்களில் பார்க்கவே முடியாதா என்று வருத்தப்பட்டார்கள்.
தற்போது நல்ல செய்தி வந்துள்ளது. சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்கிற படத்தில் நடிக்கவிருக்கிறாராம் வடிவேலு. அது மட்டும் அல்ல 10 கதைகளில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம். அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இனி வரிசையாக வருமாம்.

இனி நீங்கள் என்னை படங்களில் அடிக்கடி பார்க்கலாம் என்று தலைமை செயலகத்திற்கு வந்த வடிவேலு கூறியதன் அர்த்தம் இது தான் போன்று. எது எப்படியோ, இனி வடிவேலுவை மீம்ஸ்கள் தவிர்த்து படங்களிலும் பார்க்கலாம்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்