Google நிறுவனம் வருகிற ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஒரு புதிய மிட் ரேன்ஜ் பிக்சல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அது பிக்சல் 5ஏ மாடலாக இருக்கலாம். என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும், இதோ முழு விவரங்கள்.
கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. நினைவூட்டும் வண்ணம், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், கூகுள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் பிக்சல் 5a மாடலை அறிமுகப்படுத்துவதாக உறுதி செய்தது.
ஜூன் மாதத்தில் வெளியான ப்ளூம்பெர்க் அறிக்கையின் வழியாக, இந்நிறுவனம் குறிப்பிட்ட மாடலை ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தும் என்று தெரியவந்தது. இப்போது புதிய வதந்திகள் கூகுள் தனது புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 17 ஆம் திகதி அறிமுகப்படுத்தும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
வெளியீட்டு திகதி தவிர, பிக்சல் 5a ஸ்மார்ட்போனின் சில படங்களும் ஆன்லைனில் வெளியாகி உள்ளன.
ஆண்ட்ராய்டு போலீஸ் வலைத்தளம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கூகுள் தனது பிக்சல் 5 ஏ ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 17 ஆம் திகதி அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கூகுள் பிக்சல் 5a ரப்பர் போன்ற மேட் ஃபினிஷ் ரியர் பேனலுடன் வருவதாக கூறப்படுகிறது. உடன் 3.5 மிமீ ஆடியோ ஜாக்கை வைத்திருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் பிக்சல் 5ஏ 4,680 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யும் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.
கூகிள் பிக்சல் 5ஏ மாடலில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள், விவரக்குறிப்புகள்:
– 6 ஜிபி ரேம்
– ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி ப்ராசஸர்
– 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
– ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்
– ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டை இந்த ஆண்டின் பிற்பகுதியில் பெறும்
– 1080×2340 பிக்சல் ரெசல்யூஷன்
– 6.4 இன்ச் FHD+ டிஸ்ப்ளே
– டூயல் சிம் ஆதரவு
– பின்புறம் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்
– டூயல் ரியர் கேமரா
– f/1.7 லென்ஸ் 12MP பிரதான சென்சார்
– f/2.2 லென்ஸ் கொண்ட 16MP அல்ட்ரா-வைட் கேமரா
– அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் 8 எம்பி செல்பீ கேமரா.
– ஐபி 67 நீர், வியர்வை மற்றும் தூசி எதிர்ப்பு
– ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
– இரண்டு மைக்ரோஃபோன்கள்
– 4680 எம்ஏஎச் பேட்டரி
– 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க கூகுள் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்துமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.