19 ஆண்டுகளுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணைந்த இசையாமைப்பாளர்!

Date:

முரளி நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ‘இதயம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கதிர். தொடர்ந்து ‘காதலர் தினம்’, ‘காதல் தேசம்’ போன்ற படங்களை இயக்கினார். இந்தப் படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. இவர் கடைசியாக இயக்கிய தமிழ் படம் ‘காதல் வைரஸ்’. 2002-ம் ஆண்டு வெளியான படம் தோல்வியை தழுவியது.

தொடர்ந்து தமிழில் கடந்த 19 ஆண்டுகளில் எந்த படத்தையும் இயக்காமல் இருந்த இயக்குனர் கதிர், தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார். அவர் இயக்கும் புதிய படத்தில் புதுமுக நாயகன் கிஷோர் நடிக்க உள்ளார். ஆர்.கே.இந்தர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

தொடர்ச்சியாக, காதல் கதையம்சம் கொண்ட படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக இயக்குனர் கதிர் கூறினார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ‘காதலர் தினம்’, ‘காதல் தேசம்’, ‘காதல் வைரஸ்’ ஆகிய படங்களில் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது 19 ஆண்டுகளுக்கு பின் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்