சூரியவெவ வெவேகம வீதியில் மகாவெலிகடர சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு கொள்ளையர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திஸ்ஸமஹாராம, தெபரவெவ பகுதியில் தங்க நகை கொள்ளை இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் அவர்களை கைது செய்ய முயன்றனர்..
சூரியாவெவ பொலிஸ் குழுவினர் கொள்ளையர்களை துரத்திச் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பொலிசார் நடத்திய பதில் தாக்குதலில் அவர்கள் படுகாயமடைந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
இதன்போது, பொலிஸ் ஜீப்பும் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியது. இதில் 5 பொலிசார் காயமடைந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1