அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சு சுதந்திரம் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை மீறி தனிமைப்படுத்தல் சட்டங்களை அமுல்ப்படுத்த முடியாதென கொழும்பு மேலதிக நீதவான் சுலோச்சனி அபேவிக்ரம இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் வேலை இழந்த மீனவர்கள் முகத்துவாரத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணையின் போது நீதிமன்றத்தில் மேலதிக நீதவான் இதனை தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் அமல்படுத்தப்படும்போது, அது ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளை மீற முடியாது என்று நீதவான் கூறினார்.
தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களால் பொதுமக்களை அடக்கக் கூடாது என்றும் கொழும்பு மேலதிக நீதவான் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
+1