சகல சௌபாக்கியங்களும் அருளும் நித்யா தேவி ஸ்லோகம்
சர்வாத்மிகா என்ற திருநாமம் கொண்ட இத்தேவி பொருட்களை இயக்கும் சக்தியாய்த் திகழ்கிறாள். டாகினி போன்ற தேவதைகளின் அதிதேவதையாய்த் திகழும் அம்பிகையான இவள், உதயத்து சூரிய நிறம் கொண்டு பிரகாசிப்பவள். மந்தகாசமான திருமுகத்தையுடையவள். பிரகாசமான மகுடம் தரித்து தன் திருக்கரங்களில் பாசம், அங்குசம், புத்தகம், ஜபமாலை, புஷ்ப பாணம், கரும்புவில், வாள், கேடயம், கபாலம், சூலம் ஏந்தி அபயவரதம் தரித்தவள்.
ஸ்லோகம்:
ஓம்
நித்யா பைரவ்யை
வித்மஹே நித்யா நித்யாயை தீமஹி தன்னோ யோகிநி ப்ரசோதயாத்.
வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச தசமி, கிருஷ்ண பட்ச சஷ்டி. இந்த ஸ்லோகத்தை தினசரி கூறிவந்தால் அனைத்துத்தொல்லைகளிலிருந்து விலகி தோஷங்கள் நிவர்த்தியாகி அஷ்ட ஐஸ்வர்யங்களும் தீர்க்கமான உடல் நலமும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1