26.7 C
Jaffna
January 14, 2025
Pagetamil
மருத்துவம்

கொரோனா வைரசை வீட்டு வைத்தியம் கட்டுப்படுத்துமா?

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராய்வது அவசியமானது. டாக்டர்களிடம் ஆலோசனை பெறாமல் சுயமாக மருந்து உட்கொள்ளக்கூடாது.

இரண்டாவது இரண்டாவது அலை இயக்கத்தில் இருக்கும் நிலையில் சுய பாதுகாப்பை பின்பற்றுவதில் அனைத்து தரப்பினரும் முனைப்பு காட்டுகிறார்கள். பாரம்பரிய உணவு பழக்கம், பாட்டி வைத்தியம் மீதான மோகமும் அதிகரித்துள்ளது. சமூகவலைத்தளங்களிலும் பாரம்பரிய உணவு பழக்கம் பற்றிய தகவல்கள் பரவலாக உள்ளன. அவற்றுள் ஒருசில தகவல்கள் வைரஸை முழுவதுமாக கட்டுப்படுத்தப்படும் என்ற ரீதியிலும் பரப்பப்படுகின்றன. ஆனால் அவருக்கு மருத்துவ ரீதியாக ஆராய்ந்து பார்த்தால் கட்டுக்கடைகளாக இருக்கவும் செய்கின்றன.

அந்த வகையில் வாட்ஸ் ஆப்பில் ஒரு தகவல் உலா வருகிறது. அதில், ‘‘ தினமும் 30 மி.மி. துத்தநாகம் எடுத்துக்கொள்ளுங்கள். உணவோடு 60 கிராம் வெங்காயத்தையும் சேர்த்து சாப்பிடுங்கள். வைரஸ் நுரையீரலுக்குள் நுழைவதற்கு முன்பு 4 நாட்கள் நாசிப்பாதையில் தங்கி இருக்கும். வெங்காயத்தில் இருக்கும் சல்பூரிக் அமிலம் நாசிப்பாதையில் இருக்கும் வைரசை அழிக்க உதவுகிறது. வெங்காயத்தை சாப்பிடுவதன் மூலம் ஆரம்பக்கட்டத்திலேயே வைரசை தடுத்து தற்காத்துக் கொள்ளலாம்.

இரவில் தூங்குவதற்கு முன்பு சூடான நீரில் ஆவி பிடியுங்கள். மூக்கு வழியாக 10 முறை உள்ளிழுத்து வாய் வழியாக சுவாசியுங்கள். பின்பு வாய் வழியாக நீராவியை உள் இழுத்து மூக்கு வழியாக சுவாசியுங்கள். பகல் வேலையில் வைரஸ் உள் நுழைந்திருந்தாலும் அது நீராவியால் கொல்லப்படும். அதனால் ஒருநாளைக்கு மூன்று முறை இவ்வாறு செய்து வாருங்கள். இந்த தகவலை உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், அறிமுகமானவர்களுக்கு பகிருங்கள் ’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த தகவலின் உண்மைத்தன்மை குறித்து நுரையீரல் நிபுணர் டாக்டர் விகாஸ் மவுரியா விளக்கம் அளித்துள்ளார். ‘‘ பரிசோதனையில் தொற்று தொற்று உறுதி செய்யப்பட்ட டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் மட்டுமே துத்தநாகம் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். மற்றபடி அதை உட்கொள்ள வேண்டியதில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடிய உணவுகளை உட்கொள்வதே போதுமானது.

வெங்காயம் சாப்பிடுவது வைரஸை அழித்துவிடும் என்பதில் உண்மை இல்லை. அது முழுமையான கட்டுக்கதை. அதுபோல் நீராவியை மூக்கு வழியாக உள்ளிழுப்பதன் மூலம் வைரசை கொல்ல முடியாது. மூக்கடைப்பு, சளி போன்ற அறிகுறி கொண்டவர்கள் நீராவியை நுகர்வது இதமளிக்கும். சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராய்வது அவசியமானது. டாக்டர்களிடம் ஆலோசனை பெறாமல் சுயமாக மருந்து உட்கொள்ளக்கூடாது ’’ என்கிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

Leave a Comment