தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும், அங்கிருந்து தப்பியோட ஏராளமாக ஆப்கானிஸ்தான் மக்கள் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.
இன்று கபூர் ஹமீத் ஹர்சாய் விமான நிலையத்தில் அமெரிக்க விமானம் தரையிறங்கிய போது, ஏராளமான் மக்கள் அதில் தொங்கி ஏற முயன்றனர்.
இதேவேளை, கபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானமொன்றிலிருந்து 3 பேர் கீழே விழுந்தனர். அதில் ஒருவர் விமானத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியது.
அவர் ஏன் சுடப்பட்டார், அவர் யார் என்ற விபரங்கள் வெளியாகவில்லை.
அந்த விமானம் அமெரிக்காவை சேர்ந்தது. அமெரிக்க தூதரகத்தில் தங்கியிருந்தவர்கள் மற்றும் ஒரு பகுதி ஆப்கானியர்கள் அதில் பயணம் செய்தனர்.
இதேவேளை ஹமீட் ஹர்சாய் விமான நிலையத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.



