ரம்யா பாண்டினுக்கு இவ்வளவு ரசிகர்களா? பிறந்தநாளுக்கு வந்த பரிசுகளை பாருங்க.
ரம்யா பாண்டியன் விஜய் டிவியின் பிக் பாஸ் நான்காம் சீர்களில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதற்கு முன்பே அவர் சின்னத்திரையில் பிரபலமான ஒருவராக தான் இருந்து வந்தார். அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் பிக் பாஸ் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
பிக் பாஸில் அவர் இறுதி வரை இருந்தாலும் அவரை பற்றி நெகடிவ் விமர்சனங்கள் தான் அதிகம் வந்தது. அதை எல்லாம் அவர் பொருட்படுத்தவில்லை. தற்போது சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார் அவர்.
சமீபத்தில் ரம்யா பாண்டியன் தனது பிறந்தநாளை கொண்டாடினர். அப்போது அவருக்கு அதிக ரசிகர்கள் கிப்ட் அனுப்பி வைத்தனர். அதை எல்லாம் குவித்து வைத்து ரம்யா பாண்டியன் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த நாளை இன்னும் ஸ்பெஷல் ஆகியவர்களுக்கு நன்றி என அவர் கூறி உள்ளார். மேலும் தனது பிறந்தநாளுக்கு மரம் நடுவது, உணவு வழங்குவது என சில நல்ல விஷயங்கள் செய்பவர்களுக்கும் அவர் நன்றி கூறி உள்ளார்.
“I am truly blessed to have an amazing set of well-wishers who go above and beyond, to radiate positivity, not just today but everyday. A big ‘Thank you’ for taking the time and for all the gestures – I’m counting my blessings”என அவர் குறிப்பிட்டுள்ளார்.