மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 9,36,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிப்பு பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 5 ஆயிரத்து 787 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 5 ஆயிரத்து 352 பேர் குணமடைந்தனர். இதேபோல மேலும் 134 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். தற்போது வரை 63,262 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தற்போது, டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மகாராஷ்டிராவில் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
தானே நகரில் ஒருவருக்கு நேற்று முன்தினம் டெல்டா பிளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்மூலம் டெல்டா பிளஸ் பாதிப்பு எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. டெல்டா பிளஸ் பாதிப்பால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1