26.3 C
Jaffna
January 2, 2025
Pagetamil
தொழில்நுட்பம்

லீக் ஆன ஜியோபோன் நெக்ஸ்ட் அம்சங்கள்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது புதிய குறைந்த விலை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ஜூன் மாத வாக்கில் அறிவித்தது. புதிய ஸ்மார்ட்போன் ஜியோபோன் நெக்ஸ்ட் என அழைக்கப்படுகிறது. எனினும், ஜியோபோன் நெக்ஸ்ட் அம்சங்களை அந்நிறுவனம் அப்போது வெளியிடவில்லை.

தற்போது ஜியோபோன் நெக்ஸ்ட் அம்சங்கள் மென்பொருள் மூலம் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் LS-5701-J எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலில் டுயோ-கோ செயலி பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் கூகுள் கேமரா கோ புது வேரியண்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த கேமராவுடன் ஸ்னாப்சாட் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதை கொண்டு இந்தியாவுக்கான ஸ்னாப்சாட் லென்ஸ்களை பயன்படுத்த முடியும்.

மற்ற அம்சங்களை பொருத்தவரை HD+ 1440×720 பிக்சல் ஸ்கிரீன், 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் 215 பிராசஸர், டூயல் சிம், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2 வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி ஆம்னிவிஷன், 8 எம்பி செல்பி கேமரா, கேலக்ஸிகோர் GC34W சென்சார் வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி அல்லது 3 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என தெரிகிறது. ஜியோபோன் நெக்ஸ்ட் விற்பனை செப்டம்பர் 10 ஆம் தேதி துவங்கும் என ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மைக்ரோசொப்ட் விண்டோஸ் செயலிழப்பு – ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ சிக்கலும், சில புரிதல்களும்

Pagetamil

இந்தியராணுவத்தில் 51 கிலோ எடை கொண்ட ரோபோ நாய்கள்!

Pagetamil

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

Leave a Comment