முதல் முறையாக கோட்டையில் கொடி ஏற்ற உள்ளார் மு.க. ஸ்டாலின்

Date:

நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு, ரெயில் நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு, பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க. ஸ்டாலின் முதல் முறையாக கோட்டையில் கொடி ஏற்ற உள்ளார். இதனால் கோட்டை கொத்தளத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் நவீன சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுதந்திர தினத்தை ஒட்டி 33 பேருக்கு முதல்வரின் சிறப்பு பதக்க விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் நல்வாழ்வுத்துறையில் 9 பேர், காவல்துறையில் 3 பேர் , தீயணைப்பு துறையில் 3 பேருக்கு முதல்வர் சிறப்புப் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

நகராட்சி நிர்வாகத் துறையில் 6 பேர், வருவாய் பேரிடர் மேலாண்மை துறையில் 3 பேருக்கு சிறப்புப் பதக்கம் அளிக்கப்படவுள்ளன. கூட்டுறவுத்துறையில் 3 பேர், ஊராட்சித்துறையில் 6 பேருக்கு முதல்வர் சிறப்புப் பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி புதைகுழியில் 2 சிறுவர்களின் எச்சங்கள் உட்பட 8 புதிய மனித என்புக்கூட்டுகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனித புதைகுழியில் இரண்டு சிறுவர்களின் மனித என்பு கூட்டு தொகுதிகள்...

மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேற்;றால் அறுத்து தற்கொலை செய்ய முயற்சியையடுத்து பெரும் பரபரப்பு

மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்