30.6 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இந்தியா

முதல்முறையாக வேளாண்மைத் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல்: குவியும் பாராட்டுக்கள்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தபிறகு, ஜூன் 21ம் தேதி சட்டசபையின் முதல் கூட்டம் தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. அதன்பின்னர் நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் துறைவாரியான நிதி ஒதுக்கீடு, பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. முழுக்க முழுக்க இந்த பட்ஜெட் காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. கூட்டத்தொடரின் 2ம் நாளான இன்று, தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

இந்த பட்ஜெட்டில் வேளாண் துறை, கால்நடைத்துறை, பால்வளத்துறை போன்றவற்றில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இ-பட்ஜெட் என்பதால் அமைச்சர் பட்ஜெட்டை வாசிக்கும்போது, அந்த வாசகங்கள், எம்.எல்.ஏ.க்களின் மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர் திரை மூலம் ஓடுகிறது. அதன்மூலம் பட்ஜெட் தொகுப்பை எம்எல்ஏக்கள் கவனித்தனர்.

இதையும் படியுங்கள்

மும்பை தாக்குதல் தீவிரவாதி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா: சிறப்பு விமானத்தில் இன்று அழைத்து வரப்படுகிறார்

Pagetamil

தண்​டவாளத்​தில் படுத்து ரீல்ஸ் எடுத்​தவர் கைது

Pagetamil

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்

Pagetamil

10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் ‘சட்டவிரோதமானது’ – உச்ச நீதிமன்றம்

Pagetamil

பிக்பாஸ் தர்ஷன் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!