பெண்களின் இடுப்பு வலியைப் போக்கும் பரிபூரண நவாசனம்

Date:

பெண்களின் இடுப்பு வலியை குணமாக்கும் ஆசனம்

பரிபூரண நவாசனம் செய்தால் உடலும் மனதும் உற்சாகமடையும். பரிபூரண ஆரோக்கியத்தை வாழ்வில் பெறலாம். இதனால் இந்த ஆசனம் பரிபூரண நவாசனம் என்று அழைக்கப்படுகிறது.

விரிப்பில் நேராக படுத்து இரு களையும் தலைக்கு பின்னால் நீட்டி வைக்கவும். பிறகு மூச்சை இழுத்துக்கொண்டே கைகளையும் கால்களையும் உயர்த்த வேண்டும். கைகளை கால் பெருவிரல் நோக்கி கொண்டு வரவும். பின் இரு கைகளையும் இரு கால்களுக்கு அடியில் கும்பிட்ட நிலையில் வைக்க வேண்டும்.

தற்போது பத்து விநாடிகள் இருக்க வேண்டும். பிறகு மெதுவாக சாதாரண நிலைக்கு வரவேண்டும். இதே போல் மூன்று முறைகள் செய்யவும். ஒரு முறை செய்யும் போது ஒரு நிமிடம் ஓய்வு எடுக்கலாம்.

பலன்கள்

இந்த ஆசனம் செய்வதால் முகத்தில் உள்ள அனைத்து தசைகளும் சிறப்பாக செயல்படும் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ளவும்.

சிறுகுடல், பெருங்குடலில் உள்ள கழிவுகளை வெளியேறி குடல் சுத்தமாகும். மேலும் இந்த ஆசனம் செய்தால் குடல் இறக்கம் வராமல் குடலை திடப்படுத்துகின்றது.

கழுத்து வலி, நடு முதுகுவலி, அடி முதுகுவலி நீங்கி முதுகெலும்பு பலம் பெறும். சிறுநீரக உறுப்பை வலுவாக்கும்.

இடுப்பு வலியால் அவதிப்படும் பெண்கள் இந்த ஆசனம் செய்தால் இடுப்பு வலி நீங்கும்.

உடல் நடுக்கம், கைகால் நடுக்கத்தை சரி செய்யும்.

பெண்களுக்கான மாதவிலக்கு பிரச்சனை, ஆண்களுக்கான ஆண்மைக் குறைவு பிரச்சனை ஆகியவை சரியாகும்.

spot_imgspot_img

More like this
Related

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...

வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை

தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள்...

தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள்

அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்