இங்கிலாந்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 வயது சிறுவன் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சூடு நடத்திய அந்த நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உலகிலேயே துப்பாக்கி வன்முறைகள் மிகவும் குறைவாக நடக்கும் நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு பொதுமக்களை குறிவைத்து மிகப்பெரிய அளவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடப்பது மிகவும் அரிதாகும். இந்த நிலையில் இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அந்த நாட்டை அதிர வைத்துள்ளது.
நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரமான பிளைமவுத் நகரம் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
கீஹாம் என்ற இடத்தில் வீதியில் மக்கள் நடந்து கொண்டிந்தனர். அப்போது அங்கு கையில் துப்பாக்கியுடன் வந்த நபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. மக்கள் அனைவரும் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் அந்த மர்ம நபர் சற்றும் ஈவு இரக்கமின்றி சுட்டு தள்ளினார்.
இதில் 3 பெண்கள் மற்றும் 10 வயது சிறுவன் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதல் பற்றி தகவல் கிடைத்ததும் பொலிசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
ஆனால் பொலிசார் வருவதற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த மர்ம நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்த பகுதியை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்த பொலிசார் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
22 வயதான ஜேக் டேவிசன்என்பவரே இந்தகொடூர தாக்குதலை நடத்தினார்.
3 வயது சிறுமி, தந்தை உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது 11 ஆண்டுகளில் இங்கிலாந்து மண்ணில் நடந்த முதல் துப்பாக்கிச்சூட்டும் சம்பவம் ஆகும்.




