கிளிநொச்சியில் வீதியில் விழுந்து உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி!

Date:

கிளிநொச்சியில் உயிரிழந்த 75 வயதுடைய பெண் மற்றும்வீதியில் விழுந்து உயிரிழந்த 47 வயதுடையவர் ஆகிய இருவரின் மாதிரிகள் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தன.

அவற்றின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

அவற்றின் அடிப்படையில்,

நேற்றைய நாள் வீதியில் வீழ்ந்து உயிரிழந்த கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை ஊழியரான விஜயகுமார் கொரோனாத் தொற்றின் பாதிப்பினாலேயே உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கிளிநொச்சியில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

196 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றான பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் அண்மைய நாட்களாக பெருமளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் மிகத் தீவிரம் பெற்றுள்ள கொரோனா அபாயம் குறித்து மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்தில் அம்பலமாகும் மஹிந்த குடும்பத்தின் அதிர வைக்கும் ஊழல்கள்!

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே (Lady Ridgeway) சிறுவர் மருத்துவமனைக்கு CT...

பிள்ளையான், கூட்டாளிகளுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்