வீதியின் குறுக்கே பஸ்ஸை விட்டு மறைத்த பொலிசார்; நல்லூரில் பக்தர்கள் கொந்தளிப்பு: தடுப்பூசி அட்டையுடன் வந்தனர்!

Date:

நல்லூர் கோயில் வளாகத்தில் பொதுமக்களுக்கும் பொலீசாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

நல்லூர் கோயிலின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், மட்டுப்படுத்தப்பட்டோர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நல்லூர் கோயில் முன்வாசலில் கோயில் நிர்வாகத்தினரின் உத்தரவில் பொலிசாரின் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது .

பொதுமக்கள் கொடியேற்ற நிகழ்வினை பார்க்காதவாறு தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது..

இதேவேளை, நல்லூர் திருவிழா தொடர்பில் யாழ் மாநகரசபை வெளியிட்ட அறிவித்தலில் பொதுமக்களிற்கு தெளிவின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. மாநகரசபை தெளிவான அறிக்கையை வெளியிடாததன் எதிரொலியாக, இன்று பக்தர்கள் கையில் தடுப்பூசி அட்டைகளுடன் கோயிலுக்கு வந்ததை அவதானிக்க முடிந்தது. எனினும், தடுப்பூசி அட்டையிருந்தாலும் அனுமதியில்லையென அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை ஓடிப் பார்த்து வாங்குவதாக திருடிச் சென்ற 3 மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்து அதனை ஓடிப்பார்பதாக...

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்