25.4 C
Jaffna
January 18, 2025
Pagetamil
விளையாட்டு

புஜாரா மீண்டும் சொதப்பல்: வடிவேலு காமெடியால் கலாய்க்கும் ரசிகர்கள்!

இந்திய டெஸ்ட் வீரர் சேத்தேஸ்வர் புஜாரா, 2019ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒரு சதம் கூட எடுக்கவில்லை. ரன்களை குவிக்க தொடர்ந்து திணறி வருகிறார். வயதும் 33 ஆகிவிட்டது. இவரது கான்ஃபிடண்ட் லெவல் முன்புபோல் இல்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 8, 15 என்ற சொற்ப ரன்களை மட்டுமே புஜாரா அடித்தார்.

இதனால், இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் சிறப்பாக சோபித்து தனது திறமையை நிரூபிக்கும் கட்டாயத்தில் இருக்கிறார். இதன்காரணமாக, முதல் டெஸ்ட் போட்டியில் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இப்போட்டியில், ‘இன்னுமாட என்ன நம்புகிறிங்க’ என்ற வடிவேலு காமெடி டயலாக்கிற்கு ஏற்ற வகையில் படுமோசமாக விளையாடி 16 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே அடித்து, தன்னை நிரூபிக்காமல் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பையாவது பயன்படுத்தி ரன்களை குவிப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் 23 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்துள்ளார். இவர் எதிர்கொண்ட பல பந்துகள் எட்ஜ்தான் ஆனது.

2019ஆம் ஆண்டிற்குப் பிறகு புஜாராவின் ஆட்டத்தில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. 3,4,5ஆவது ஸ்டெம் லைனில் வரும் பந்துகளை எதிர்கொள்ளத் திணறி வருகிறார். 2019ஆம் ஆண்டிற்கு முன்புவரை, இந்த ஸ்டெம்ப் லைனில் வந்த பந்துகளைத் துல்லியமாக எதிர்கொண்டு, இந்திய அணியின் நவீன தடுப்புச் சுவர் என நிரூபித்த அவர், தற்போது திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

Leave a Comment