ராம் போதினேனியை வைத்து தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார் லிங்குசாமி. இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்தில் உப்பேனா படம் புகழ் க்ரித்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் க்ரித்தியின் நடிப்பு திருப்திகரமாக இல்லை என்று லிங்குசாமி கடுப்பாகி திட்டிவிட்டாராம். அனைவர் முன்பும் லிங்குசாமி திட்டியதால் க்ரித்தி அழுது கொண்டே கேரவனுக்கு ஓடிவிட்டார் என்று தெலுங்கு திரையுலகில் கூறப்படுகிறது.
நடிப்பு சரியில்லை என்று இயக்குநர் தன் பட ஹீரோயினை திட்டுவது சாதாரண விஷயம் தான். அப்படி ஹீரோயினை திட்டிய முதல் இயக்குநர் லிங்குசாமி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.க்ஷஇதற்கிடையே முதல் படமான உப்பேனாவில் சிறப்பாக நடித்த க்ரித்தி ஷெட்டியை போய் லிங்குசாமி இப்படி திட்டிவிட்டாரே. இது சரியில்லை என்று டோலிவுட் வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள். புதுமுகம் புச்சிபாபு சனா இயக்கிய உப்பேனா படம் மூலம் தான் க்ரித்தி ஷெட்டி ஹீரோயினாக அறிமுகமானார். கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு இடையே வெளியான அந்த படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. உப்பேனா படத்தில் க்ரித்தியின் அப்ப வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.