ரெட்மி 10 ஸ்மார்ட்போன் NBTC சான்றிதழ் இணையதளத்தில் மாடல் நம்பர் 21061119AG உடன் காணப்பட்டது. ஆக மிக நீண்ட காலமாக லீக்ஸ் தகவலில் மட்டுமே சிக்கி வந்த இந்த சியோமி ஸ்மார்ட்போனின் அறிமுகம் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்படுகிறது மற்றும் இது விரைவில் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்லாந்தில் அறிமுகமான கையோடு ரெட்மி 10 ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் உடனடி அறிமுகத்தை சந்திக்கலாம்.
120Hz டிஸ்பிளே, 5000mAh .
Redmi 10 ஸ்மார்ட்போன் ஆனது Redmi Note 10 க்கு கீழ் அமரும் ஒரு மலிவான ஸ்மார்ட்போனாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, சில நாட்களுக்கு முன்பு, Redmi 10 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் ரெண்டர்கள் லீக் ஆனது. அவைகள் குறிப்பிட்ட ஸ்மார்ட்போனை பற்றிய நல்ல தகவலை நமக்கு வழங்கியது.
சமீபத்தில் கிடைத்த NBTC சான்றிதழ் வரவிருக்கும் Redmi ஸ்மாட்போனின் எந்த விவரக்குறிப்புகளையும் வழங்கவில்லை. இது மாடல் எண் மற்றும் மோனிகரின் அறிமுகத்தை மட்டுமே உறுதிப்படுத்துகிறது மற்றும் விரைவில் தாய்லாந்தில் தொடங்கப்படும் என்று கூறுகிறது.
ரெட்மி 10 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்கிற தகவல்களுக்கு நாம் மீண்டும் பழைய லீக்ஸ் தகவல்களுக்கே செல்ல வேண்டும்.
சில நாட்களுக்கு முன்னர், சிங்கப்பூரின் ஒரு சில்லறை விற்பனையாளர் தளத்தில் ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களும், ரெண்டர்களுடன் (புகைப்படங்கள்) பட்டியலிடப்பட்டது. அதன் வழியாக ரெட்மி 10 ஸ்மார்ட்போன் ஆனது அளவீட்டில் 162 x 75.3 x 8.95 மிமீ இருக்கும் மற்றும் இது பாலிகார்பனேட் சேஸை கொண்டிருக்கும் என்பதை அறிய முடிகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் அளவிலான FHD+ பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவுடன் வரும், இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்-ஐ வழங்குகிறது.
இதில் 8 மெகாபிக்சல் முன் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின் பக்க பேனலில் குவாட் கேமரா அமைப்பு உள்ளது, இதில் 50 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் லென்ஸ் மற்றும் ஒரு ஜோடி 2 மெகாபிக்சல் கேமராக்கள் உள்ளன.
இந்த அனைத்து அம்சங்களும் புதிய ஹீலியோ ஜி 88 சிப்செட் உடன் 6 ஜிபி ரேம் வரை இயக்கப்படுகிறது. மேலும் இது 128 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது.