நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நாடளாவிய ரீதியில் ஊரடங்கு விதிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும், வைரஸ் பரவுவதைத் தடுக்க தற்போதுள்ள கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்று மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண கூறினார்.
கோவிட் -19 தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு ஊடகங்களுக்கு பேட்டியளித்த இராஜாங்க அமைச்சர் ஜெயசுமன, விரைவில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றார்.
பரவலைக் கட்டுப்படுத்த பல முன்மொழிவுகள் பணிக்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன என்றார்.
சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுகளை பரிசீலித்த பின்னர் முடிவுகள் எடுக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ஜெயசுமண குறிப்பிட்டார்.
கோவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா புதிய கட்டுப்பாடுகள் குறித்து இன்று மாலை அறிவிப்பை வெளியிடுவார்.