புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Poco F3 GT மாடலை வாங்கிய சில பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தும் போது, குறிப்பாக கேமிங்கின் போது வெப்பமடையும் சிக்கல்களை சந்திக்கிறார்கள். நல்ல விஷயம் என்பது போக்கோ நிறுவனம் இதை ஒப்புக் கொண்டுள்ளது.
மேலும் போக்கோ நிறுவனம் F3 GT யூனிட்களின் மிகச் சிறிய தொகுப்பு ஹீட்டிங் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில Poco F3 GT பயனர்கள் இதைப் பற்றி ட்விட்டரில் புகார் செய்தனர் மற்றும் பெரும்பாலும் அந்த பயனர்கள் MIUI 12.5.4.0.RKJINXM-இல் இருக்கலாம்.
போக்கோ எஃப் 3 ஜிடி ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் போதும் அல்லது கேமிங் செய்யும் போது நீங்கள் வெப்பமூட்டும் பிரச்சினைகளை எதிர்கொண்டால், நீங்கள் போக்கோவிலிருந்து ஒரு தீர்வை எதிர்பார்க்கலாம். வெப்பமடையும் பிரச்சினை சில மென்பொருள் கோளாறு காரணமாக இருக்கலாம் என்றும் மற்றும் போக்கோ அதை தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஹீட்டிங் சிக்கலை போக்கோ ஏற்றுக்கொண்டாலும் கூட, சிக்கலைச் சரிசெய்வதற்கான தற்காலிக தீர்வு அல்லது டைம்லைன் பற்றி போக்கோ இன்னும் வாயை திறக்கவில்லை.
நினைவூட்டும் வன்ணம் போகோ எஃப் 3 ஜிடி சமீபத்தில் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 1200 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது
– 6.67 இன்ச் டர்போ அமோலேட் 10-பிட் டிஸ்ப்ளே
– எச்டிஆர் 10+ ஆதரவு
– 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
– 480 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
– டிசி டிம்மிங் ஆதரவு
– மீடியாடெக் டைமன்சிட்டி 1200 SoC
– 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ்
– ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
– 64 மெகாபிக்சல் பிரதான கேமரா (எஃப் / 1.65)
– 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் (119 டிகிரி பீல்ட் அப் வியூ)
– 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
– இதன் மெயின் சென்சார் ஒரு ED (extra-low dispersion) கண்ணாடியால் ஆனது, இது பொதுவாக டி.எஸ்.எல்.ஆர் லென்ஸ்களில் படங்களின் சிறந்த தெளிவுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
– மேலும் இதன் கேமரா அமைப்பானது RGB பளபளப்பு மற்றும் மின்னல் ஃப்ளாஷ் போன்ற ஃபிளாஷ் தொகுதி ஆகியவை அடங்கும்.
– முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
– 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
– 5.065 எம்ஏஎச் பேட்டரி
– 15 நிமிடங்களில் பாதி பேட்டரி அளவை நிரப்ப முடியும்
– ஐபி 53 நீர் எதிர்ப்பு
– கேமிங்கில் சிறந்த குரல் தரத்திற்காக மூன்று மைக்ரோஃபோன்கள்
– வைஃபை கேமிங் ஆண்டெனா
– துல்லியமான ஹாப்டிக் பீட்பேக் மற்றும் அதிர்வு கொண்ட எக்ஸ்-ஷாக்கர்கள்
– ஜிடி சுவிட்ச் மற்றும் மேக்லெவ் ட்ரிக்கர்ஸ் – விண்வெளி தர ஒயிட் கிராபெனின் ஹீட் சிங்க் – ரே டிரேசிங் திறன்களை வழங்கும் ஹைப்பர்எங்கை 3.0 – டால்பி அட்மோஸ் ஆதரவுடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் – பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்.
– பெரிய வேப்பர் சேம்பர்