பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவத்தை இம்முறை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என ஆலய பரிபாலன சபை அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்றைக் கருத்தில்கொண்டு சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க மகோற்சவம் நிறுத்தப்பட்டுள்ளது என பரிபாலன சபை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான ஆவணி மகோற்சவம் நாளை 14 ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1