பயணிகளுடன் சென்ற இ.போ.ச பேருந்து விபத்து!

Date:

கல்லுண்டாய் வீட்டுத்திட்ட பகுதியில் தனியார் பேருந்தினை முந்திச் செல்ல முற்பட்டு கட்டுப்பாட்டை இழந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து குடைசாய்ந்தது

இலங்கை போக்குவரத்து சபையின் காரைநகர் சாலைக்கு சொந்தமான யாழ்ப்பாணம் -காரைநகர் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து இன்றுகாலை காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளையில், கல்லுண்டாய் வீட்டுத்திட்ட பகுதியில் வீதியில் பயணித்த காரைநகர்- யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தினை முந்திச் செல்ல முற்படுகையில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகே பாய்ந்து குடை சாய்ந்தது.

தற்பொழுது கல்லுண்டாய் வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த பகுதியில் இன்று காலை மழை பெய்ததன் காரணமாக வழுக்கல் நிலை காணப்பட்டதாகவும் வேகமாக வந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகவும் விபத்தை நேரடியாக பார்த்தோர் தெரிவித்தனர்.

ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த குறித்த பேருந்தின் சாரதி தப்பி ஓடியுள்ளதாகவும் மேலும் குறித்த வீதியில் ஒவ்வொரு நாளும் குறித்த பேரூந்தானது மிகவும் வேகமாகவே பயணிப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் சிலை விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு தெளிவானது – டக்ளஸ்

திலீபனின் சிலை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக...

இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி முகாமைத்துவ, வணிக பீடத்துக்கு விஜயம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்துக்கு, யாழ்ப்பாணத்துக்கான இந்திய...

ரணிலின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்