27 C
Jaffna
January 24, 2025
Pagetamil
கிழக்கு முக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோத மணல்கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்!

மட்டு கரடியனாறு பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் பொலிசார் மீது துப்பாக்கி சூடு ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு கரடியனாறு பன்குடாவேளி பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் ஒன்று பொலிசாரின் சமிக்கையை மீறி சென்றதையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (12) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கரடியனாறு பங்குடாவெளிச் சந்தியில் சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணியளவில் சட்டவிரோத மணல் அகழ்ந்து உழவு இயந்திரத்தில் எடுத்துச் சென்ற போது பொலிசார் குறித்த உழவு இயந்திரத்தை நிறுத்த முயற்சித்தபோதும் உழவு இயந்திரம் பொலிசாரின் சமிக்கையை மீறி சென்றது. பொலிசார் அதனை துரத்திச் சென்றுஉழவு இயந்திரம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

செங்கலடி பன்குடாவெளியைச் சேர்ந்த 27 வயதுடைய துசாந்தன் என்பவரது தோள் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருக்கடலூரில் கரையொதுங்கிய இறந்த கடலாமை

east tamil

அடம்பொடை மக்களின் கோரிக்கை

east tamil

திருகோணமலையில் தொழிற்சந்தை நிகழ்வு

east tamil

திருகோணமலை புகையிரதத் திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது

east tamil

சிங்களமயப்படுத்தப்படும் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை

east tamil

Leave a Comment