இளம் தாயும், 7 நாள் சிசுவும் கொரோனா தொற்றால் உயிரிழப்பு: வவுனியாவில் பரிதாபம்!

Date:

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளம் தாயும், 7 நாள் சிசுவும் கொவிட் தொற்று நோயால் இன்று (11) உயிரிழந்தனர்.

குறித்த பெண் பிரவசத்திற்காக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட  பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

ஆபத்து நிலையையடுத்து சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளது.

இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை உயிரிழந்தது. இன்று காலை தாயாரும் உயிரிழந்தார்.

மரணமடைந்தவர்கள் பட்டக்காடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணும், அவரது ஒரு வார குழந்தையுமே இவ்வாறு மரணமடைந்தவராவார். குறித்த இருவரினது சடலத்தையும் பூந்தோட்டம் மயானத்தில் தகனம் செய்வதற்குரிய நடவடிக்கையை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்