29.5 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இந்தியா

ஆப்கன் நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறும்படி இந்தியர்களுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு!

ஆப்கன் நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறும்படி, அங்குள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது

அண்டை நாடான ஆப்கானிஸ்தானில், அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே பயங்கர சண்டை நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்கப் படங்கள் திரும்பப் பெறப்படுவதை அடுத்து, அங்கு தலிபான்கள் தாக்குதல்களை நடத்துகின்றனர்.

தலிபான்கள் நடத்திய தாக்குதல்களில் பலர் கொல்லப்படுகிறார்கள். அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற இந்திய புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக்கும் தலிபான்களால் கொல்லப்பட்டார். தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, ஆப்கனில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிடப்பட்ட அறிகுறியில் கூறப்பட்டுள்ள ஒன்று:

மஜார் ஐ ஷரீப் நகரில் இருந்து இந்தியாவிற்கு சிறப்பு விமானம் ஒன்று இன்று இயக்கப்பட உள்ளது. நகர் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள், அந்த விமானத்தில் தாயகம் திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள். தாயகம் திரும்ப விரும்புவோர் உடனடியாக தங்கள் பெயர் மற்றும் பாஸ்போர்ட் விவரங்களை உடனடியாக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல் நடத்த துவங்கியதை தொடர்ந்து, அங்குள்ள தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரிகள், சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். தற்போது, ​​ஆப்கனில், 1,500 இந்தியர்கள் உள்ளதாக மத்திய அரசு கணக்கிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தேர்தல் நடைமுறை அறிவிப்பு: அண்ணாமலை, நயினாருக்கு சிக்கல்?

Pagetamil

‘பாமகவுக்கு இனி நானே தலைவர்; அன்புமணி செயல் தலைவர்’ – ராமதாஸ் அறிவிப்பு

Pagetamil

மும்பை தாக்குதல் தீவிரவாதி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா: சிறப்பு விமானத்தில் இன்று அழைத்து வரப்படுகிறார்

Pagetamil

தண்​டவாளத்​தில் படுத்து ரீல்ஸ் எடுத்​தவர் கைது

Pagetamil

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!