வவுனியா பூந்தோட்டம் சந்தியில் வீதிகளில் பயணிப்போரை வழி மறித்து பிசீஆர் பரிசோதனை

Date:

வவுனியா பூந்தோட்டம் சந்தியில் வீதிகளில் பயணிப்போரை வழி மறித்து சுகாதார பிரிவினரால் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் ஒரே நாளில் இராணுவத்தினர் மற்றும் வைத்தியர்கள் உட்பட 76 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் நாட்டில் 229 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களை இணங்கண்டு மாவட்டத்தில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வவுனியா பூந்தோட்டம் சந்தியில் இன்று (11) காலை எழுமாற்றாக பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வீதியில் அத்தியாவசிய தேவையின்றி பயணிப்போர், சீரான முறையில் முகக்கவசம் அணியாதவர்கள், சுகாதார முறைகளை பின்பற்றாதவர்கள், பேரூந்தில் சமூக இடைவெளியின்றி பயணித்தோர் என 200 க்கு மேற்பட்டவர்களை சுகாதார பிரிவினர் வழிமறித்து பிசீஆர் பரிசோதனை முன்னெடுத்திருந்தனர்.

அவர்களது பிசீஆர் முடிவுகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேற்;றால் அறுத்து தற்கொலை செய்ய முயற்சியையடுத்து பெரும் பரபரப்பு

மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச்...

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை ஓடிப் பார்த்து வாங்குவதாக திருடிச் சென்ற 3 மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்து அதனை ஓடிப்பார்பதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்