கலிகமுவ பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரணத் பத்ம சாந்த கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அவர் பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
கேகாலை கலிகமுவ, அம்பன்பிட்டிய கிராமத்தில் வசிக்கும் ரணத் பத்ம சாந்த (54,) இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.




