லடாக்கில் மத்திய பல்கலை அமைக்க மசோதா நிறைவேறியது.

Date:

லடாக் யூனியன் பிரதேசத்தில் மத்திய பல்கலைக்கழகம் அமைப்பதற்காக மத்திய பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா 2021 மக்களவையில் கடந்த வாரம் நிறைவேறியது. மாநிலங்களவையில் நேற்று இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதத்தில் பதிலளித்த கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘‘லடாக்கில் இப்போது மத்திய பல்கலைக்கழகம் இல்லை. லடாக், லே பகுதிகளில் மாணவர்களுக்கு தரமான உயர் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார். எனவே, லடாக்கில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்படும்’’ என்றார். பின்னர், மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது. இதன் மூலம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

 

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஓகஸ்ட் மாதம் வரையான எரிபொருள் கையிருப்பு உள்ளது!

ஓகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த...

விஜய் அரசின் குதிரை பேரம்: பிரேமலதா கிடுக்குப்பிடி

முகத்தை மூடிக்கொண்டு தனது வீட்டுக்கு வந்ததவர் யார்? என்பதை முதல்வர் விஜய்...

16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தல்: 21 வயது குடும்பஸ்தரும் நண்பரும் மடக்கிப் பிடிப்பு!

மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டுக்கு சென்ற 16 வயது சிறுமி ஒருவரை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்