வார இறுதியில் நடந்த தவறுக்காகவோ, காலையில் செய்ய வேண்டிய திட்டங்கள் ஏதாவது சற்று தாமதமானாலோ அதற்காக கோபமோ, எரிச்சலோ அடையாதீர்கள். அது அந்த வாரம் முழுவதையும் ஆக்கிரமித்துவிடும். அலுவலகமோ, வீடோ எங்கிருந்து பணியாற்றினாலும், திங்கட்கிழமை ஒருவித சோர்வு நம்மை ஆட்கொள்ளும். அதிலிருந்து விடுபட்டு, வாரம் முழுக்க உற்சாகமாக பணியாற்ற உதவும் 4 டிப்ஸ்கள் இதோ.
1. டாப் 3 டாஸ்க்.
3 கி.மீ. நடைப் பயணம், பார்க்கும் அனைவரிடமும் சிரித்த முகத்துடன் காலை வணக்கம், 20 நிமிட உடற்பயிற்சி இது மூன்றையும் கட்டாயம் செய்யத் தவறாதீர்கள். பிறகு என்ன, திங்கட்கிழமை உற்சாகமாக உதயமாகும். அந்த வாரம் முழுக்க உற்சாகம் ஆட்கொண்டிருக்கும்.
2. எதிர்மறையாக யோசிக்காதீர்கள்
உங்களை சோர்வாக்கும் சமூக வலைத்தளப் பதிவு துவங்கி, காலையில் நீங்கள் அலாரத்தை இன்னும் 5 நிமிடம் தாமதமாக்குவது வரை அனைத்துமே உங்களை சோர்வாக்கும் விஷயங்கள் தான். எதிர்மறையாக எதையும் யோசிக்காதீர்கள். யாருடனும் வாக்குவாதம் செய்யாதீர்கள். சிரித்த முகத்தோடு அன்றைய நாளை துவக்குங்கள்.
3. கோபம் தவிருங்கள்
அலுவலகத்திற்குள் நுழைந்தவுடனோ அல்லது ‘ஒர்க் பிரம் ஹோம்’ முறையில் வீட்டிலேயே வேலையை தொடங்கும்போதோ வார இறுதியில் நடந்த தவறுக்காகவோ, காலையில் செய்ய வேண்டிய திட்டங்கள் ஏதாவது சற்று தாமதமானாலோ அதற்காக கோபமோ, எரிச்சலோ அடையாதீர்கள். அது அந்த வாரம் முழுவதையும் ஆக்கிரமித்துவிடும். அதனால் முடிந்தவரை கோபம் கொள்ளாமல் கூலாக அணுகுங்கள். பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கண்டறிந்து அதனை செயல்படுத்துங்கள்.
4. உற்சாகமாக இருங்கள்
வேலையில் மிகவும் உற்சாகமாக இருங்கள். உங்கள் அருகில் உள்ளவர் உங்களைப் பார்த்து உற்சாகமாகும்படி நடந்து கொள்ளுங்கள். நீங்கள் சோர்வாக இருந்தால் அது அவரையும் தொற்றிக்கொண்டு அவரும் அப்படியே இருந்து விடுவார். அன்றைய நாளை நீங்கள் அதிக உற்சாகத்துடன் துவக்கும்போது அனைவரும் அதே உத்வேகத்தில் வேலை செய்யத் துவங்கி விடுவார்கள்.