Pagetamil
சினிமா

லோகேஷ் கனகராயுடன் மீண்டும் நடிக்கும் பிரபல நடிகை.

நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் வில்லனாக நடிக்கின்றனர். மேலும் அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளனர்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிகப்பு நிற கோர்ட் அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, கோடு ரெட் (code RED) என குறிப்பிட்டுள்ளார். விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் இதே போல் தான் குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதால், விக்ரம் படத்தில் இணைந்துள்ளதை தான் அவர் இவ்வாறு சூசகமாக பதிவிட்டுள்ளார் போல் தெரிகிறது.

நடிகை ஆண்ட்ரியா ஏற்கனவே கமலுடன் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பழம்பெரும் உறுதுணை நடிகை பிந்து கோஷ் காலமானார்!

Pagetamil

“குடும்பத்துடன் விரதம் இருக்கும் நயன்தாரா” – ‘மூக்குத்தி அம்மன் 2’ படவிழாவில் தயாரிப்பாளர் தகவல்

Pagetamil

காதல் முறிவு: விஜய் வர்மாவை பிரிந்தார் தமன்னா!

Pagetamil

பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Pagetamil

ஒஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்

Pagetamil

Leave a Comment