கௌதாரிமுனை சீனப்பண்ணைக்கும் கடற்தொழிலாளர் சங்கத்திற்குமிடையில் ஒப்பந்தம்!

Date:

கௌதாரி முனை விநாயகர் கடற் தொழிற்சங்க உறுப்பினர்கள் ஏழு பேருக்கு அட்டைப் பண்ணைக்கான அனுமதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று பூநகரி பகுதியில் அமைந்துள்ள இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாணத்திற்கான பிராந்திய அலுவலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற நிகழ்விலையே குறித்த அனுமதிள் வழங்கிவைக்கப்பட்டது

52 பேர் குறித்த அனுமதியை கோரி உள்ள நிலையில் 7 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதுடன் எதிர்வரும் திங்கட்கிழமை அட்டைப் பண்ணைக்கான பணி ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது இதில் அனுமதிக்கு கோரிய 52 பேரும் அட்டைப்பண்னைக்குரிய பணிகள் ஆரம்பிக்க முடியும். மிகுதியானவர்களுக்கு அனுமதி விரைவில் வழங்கப்படும். அனுமதி இல்லை என்பதற்காக அட்டைப் பண்ணையினை ஆரம்பிக்காமல் இருக்க வேண்டாம் என அமைச்சர் தெரிவித்தார்.

அதனை விட குறித்த பகுதியில் சீன நிறுவனத்தால் நடத்தப்படும் அட்டைப் பண்ணைக்கான அனுமதி கௌதாரி முனை விநாயகர் கடற்றொழில் சங்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு சீன நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்

இன் நிகழ்வில் இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாண உதவிப் பணிப்பாளர் பி.நிருபராஜ் பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரன் மற்றும் துறைசார் அதிகாரிகள் மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...

வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை

தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள்...

தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள்

அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்