முன்னர் திட்டமிட்டபடி செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளைத் திறப்பதற்கான சாத்தியம் இல்லை என்று கல்வி அமைச்சர் ஜிஎல் பீரிஸ் கூறுகிறார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய அமைச்சர் பீரிஸ், தடுப்பூசி திட்டத்துடன் இணைந்து பாடசாலைகளை மீண்டும் திறக்க அரசுக்கு தெளிவான திட்டம் இருப்பதாக கூறினார்.
ஓகஸ்ட் இறுதிக்குள் பாடசாலைகளில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் வழங்கி, செப்டம்பரில் பாடசாலைகளை மீண்டும் திறக்கலாமென நம்பியதாக கல்வி அமைச்சர் கூறினார்.
எனினும் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக, திட்டமிட்டபடி பாடசாலைகளை மீண்டும் திறக்க முடியாது என்று அமைச்சர் பீரிஸ் கூறினார்.
எனவே ஒன்லைன் கல்வி முறையையே சார்ந்திருக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
இருப்பினும், தொடரும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, ஆசிரியர்கள் ஒன்லைன் கல்வி நடவடிக்கைகளை தொடர முடியாது என்றாகிறார்கள். ஒன்லைன் கல்வி நடவடிக்கைகளில் இருந்து ஆசிரியர்கள் விலகுவது பழிவாங்கும் செயலாக கருதப்பட வேண்டும் என்று அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறினார்.
அரசாங்கமும் நாடும் சுகாதார அவசர நிலையை எதிர்கொள்ளும் நேரத்தில் ஆசிரியர்கள் தங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.




