ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் மாத கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இலங்கை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல், ஒக்டோபர் 8ஆம் திகதி வரை ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது.
பேரவையின் 48ஆம் கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரலின் நகலில், இலங்கை விவகாரம் குறித்து முதல் நாளில் விவாதிக்க பட்டியலிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சல் பச்லெட், இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை குறித்து வாய்மூல அறிக்கையை முன்வைக்க உள்ளார்.




