படத்திற்காக 15 கிலோ எடையை குறைத்த சிம்பு.

Date:

கவுதம் மேனனுக்காக எடையை 15 கிலோ குறைத்த சிம்பு.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என்று பெயர் வைத்தனர். தொடர்ந்து அந்த தலைப்பை நீக்கிவிட்டு வெந்து தனித்தது காடு என்று தலைப்பு வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். போஸ்டரில் அழுக்கு படிந்த லுங்கி, சட்டையில் சிம்புவை ஒல்லியாக பார்த்த அனைவரும் அசந்து போனார்கள். வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளரான டாக்டர் ஐசரி கணேஷ் கூறியதாவது, இது ஒரு ஆக்சன் டிராமா படம். எஸ்.டி.ஆரின் கதாபாத்திரம் பற்றி என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் அவர் இதுவரை நடித்திராத கதாபாத்திரம் இது. அந்த கதாபாத்திரத்திற்காக தன் உடல் எடையை சுமார் 15 கிலோ குறைத்துவிட்டார். தற்போது மிகவும் இளமையாக தெரிகிறார் என்றார். இந்த லுக்கிற்காக எஸ்.டி.ஆர். கடந்த ஆறு மாதங்களாக வேலை செய்து வந்தார். படத்தில் அவர் நிறைய ஸ்டண்ட் செய்ய வேண்டும். அதற்காக சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறார். கதையை ஜெயமோகன் எழுதியுள்ளார். அந்த கதையுடன் கவுதம் என்னை அணுகினார். எனக்கு கதை மிகவும் பிடித்துவிட்டது. திருச்செந்தூரில் படப்பிடிப்பை தொடங்கினோம். பின் சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது. என ஐசரி கணேஷ் கூறினார்.

நதிகளிலே நீராடும் சூரியன் என்பது காக்க காக்க படத்தில் வரும் பாடல் வரி. ஸ்கிரிப்ட்டுக்கு அது பொருத்தமாக இருக்கும் என்று முதலில் நினைத்தோம். ஆனால் பாரதியாரின் கவிதையில் வரும் வெந்து தணிந்தது காடு தான் கச்சிதமாக இருக்கும் என்று பின்னர் தோன்றியது என்றார் ஐசரி கணேஷ். ராதிகா சரத்குமார் சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார். பிற நடிகர்கள், நடிகைகளின் விபரம் விரைவில் வெளியிடப்படுமாம்.

spot_imgspot_img

More like this
Related

FIFA WC 2026 | பிரான்ஸை துவம்சம் செய்து வெண்கலம் வென்றது இங்கிலாந்து!

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ்...

‘இதுதான் வாழ்க்கை’: குழந்தை யமாலுடன் எடுத்த புகைப்படம் பற்றி மெஸ்ஸி விளக்கம்!

அர்ஜென்டினா கப்டன் லயோனல் மெஸ்ஸி, யமால் குழந்தையாக இருந்தபோது இருவரும் ஒன்றாகப்...

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்