சந்நிதி ஆலய கச்சான் வியாபாரிகள்… பிறந்து ஒரு நாளான சிசு… யாழ்ப்பாண தம்பதி: வடக்கின் நேற்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்!

Date:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (7) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 73 பேருக்க தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 780 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன.

இதில் யாழ் மாவட்டத்தில் 24 பேருக்கு தொற்று உறுதியானது.

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உறுதியானது. தொண்டமானாறு பகுதியை சேர்ந்த ஆண், பெண்ணே தொற்றிற்குள்ளாகினர். இருவரும் செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் கச்சான் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள். ஆலய திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் தொற்று உறுதியானது.

இதுதவிர, ஆலய தொண்டில் ஈடுபடும் 4 பேருக்கு சந்தேகத்திற்கிடமான முடிவு கிடைத்துள்ளது. அவர்களிற்கு இன்று மீண்டும் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படும்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 6 பேருக்கு தொற்று உறுதியானது.

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உறுதியானது. இதில் உரும்பிராய் மேற்கில் 6 வயதான சிறுமியொருவரும் தொற்றிற்குள்ளாகினார்.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 2 பேருக்கு தொற்று உறுதியானது.

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றிற்குள்ளாகினார்.

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றிற்குள்ளாகினார்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவர் தொற்றிற்குள்ளாகினார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 9 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் நல்லூரடியை சேர்ந்த கணவன் மனைவியும், வேலணையை சேர்ந்த தாயின் பிறந்து ஒரு நாளேயான சிசுவும் உள்ளடங்குகிறார்கள்.

இதுதவிர, வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேரும், வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், வவுனியா பொது வைத்தியசாலையில் ஒருவரும், செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் 7 பேரும், முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் 2 பேரும், மன்னார் பொது வைத்தியசாலையில் 12 பேரும், வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், தர்மபுரம் வைத்தியசாலையில் 3 பேரும், பெரியகாடு தனிமைப்படுத்தல் மையத்தில் 2 பேரும், காங்கேசன்துறை கடற்படை தளத்தில் ஒருவரும், பலாலி விமானப்படை தளத்தில் 2 பேரும் தொற்றிற்குள்ளாகினர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ். விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூட இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய...

6 பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, ஆறு பிரதி பொலிஸ் மா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்