விசுவமடு நகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ் போதான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (07) உயிரிழந்துள்ளார்.
விசுவமடு மாணிக்கபுரத்தினை சேர்ந்த சசிக்குமார் தனோஜிகன் (19) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
இந்த இளைஞன் கடந்த ஜூலை 29ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற போது, ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். படுகாயமடைந்த நிலையில்இதனை தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞன், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த விபத்தினை தொடர்ந்து ஹயஸ் வாகனம் புதுக்குடியிருப்பு பொலிசாரால் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் காயமடைந்து இளைஞன் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.