வவுனியா தாண்டிக்குளம் வயல்பகுதியில் இருந்து மனித மண்டை ஓடு ஒன்று மீட்கப்பட்டது.
குறித்த பகுதியில் உள்ள வயல் வெளியில் நின்றவர்களால் இன்று மதியம் மண்டை ஓடு ஒன்று அவதானிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
வவுனியா பொலிசார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.