ஒரு கதவை மூடி இன்னொரு கதவைத் திறந்த கடவுள்: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.

Date:

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலுவுக்கு இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் மூலம் இடியப்ப சிக்கல் ஏற்பட்டது. அந்த சிக்கலை தீர்த்து வைக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அண்மையில் ஈடுபட்டு தோல்வி அடைந்தார்.

அப்படி என்றால் இனி வடிவேலுவை படங்களில் பார்க்கவே முடியாதா என்று ரசிகர்கள் கவலை அடைந்தனர். இதற்கிடையே அவர் வெப்தொடர் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் அது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. இந்நிலையில் பிரபல தெலுங்கு ஓடிடிதளமான ஆஹா தமிழ் பக்கம் விரைவில் வரவிருக்கிறது. பல்வேறு சுவாரஸ்ய நிகழ்ச்சிகளை தமிழ் திரையுலக பிரபலங்களை தொகுத்து வழங்க வைத்து ரசிகர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஆஹா ஈடுபட்டுள்ளது.

நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க ஆள் தேடியபோது தான் வடிவேலுவை விட்டால் யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். நானும் எத்தனை காலம் தான் வீட்டில் சும்மாவே இருப்பது என்று ஆஹா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க
வடிவேலு சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

இது குறித்து அறிந்த ரசிகர்களோ, ஆஹா நம்ம தலைவன் வரப் போறான்யா, திரும்பி வரப் போறான்யா என்று சந்தோஷமாக இருக்கிறார்கள். வடிவேலு கடந்த 10 ஆண்டுகளாக சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருந்தாலும் மீம்ஸுகள் மூலம் நம்மை எல்லாம் தினம் தினம் சிரிக்க வைத்துக் கொண்டு தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...

வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை

தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள்...

தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள்

அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்