யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் செய்யப்பட்டுள்ளார்கள்.
கடந்த 3 மாத காலமாக யாழ்ப்பாணத்தில் வீதியில் பயணிப்போரிடம் வழிப்பறியில் இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
நேற்றைய தினம் கோப்பாய் பிரதேசத்தில் கோப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரின் தொலைபேசி,50 ஆயிரம் ரூபா பணம், கைப்பை மேலும் பல ஆவணங்களை திருடி சென்றமை, யாழில் பத்திரிகை நிறுவனத்தில் கடமையாற்றும் ஒருவரின் கைத்தொலைபேசியினை திருடிச் சென்றமை, சுன்னாகம் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் கைப்பை, இரண்டு தொலைபேசிகள், முப்பதாயிரம் ரூபா பணம் கொள்ளையடித்தது, மானிப்பாயில் ஒருவரின் கைப்பை திருடிய திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களே கைதாகியுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் கைப்பை மற்றும் ஏனைய ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவர்கள் போதைப்பொருள் பாவனையாளர்கள். போதைப்பொருள் பாவனைக்கு பணம் தேவைப்பட்டதால் திருடியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யபட்டு இருவரும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள்.




