ஜப்பானால் வழங்கப்பட்ட 728,000 அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடைந்தது.
தடுப்பூசியை ஏற்றி வந்த UL-455 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மாலை 4.17 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
ஜப்பானில் நரிதா விமான நிலையத்தில் இருந்து காலை 11.23 மணியளவில் புறப்பட்ட விமானத்தில் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் குழுவும் வந்தது.
அதன்படி, எட்டு நாட்களில் இலங்கை 1.4 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை, இலங்கைக்கு 728,460 டோஸ் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி கிடைத்தது, இது ஜப்பான் அரசாங்கத்தின் நன்கொடையாகும்.
கடந்த வாரம் வந்த தடுப்பூசி டோஸ்கள் மேற்கு மாகாணத்தில் வசிப்பவர்களிற்கு இரண்டாவது டோஸாக ஏற்றப்பட்டது. ஏனையவை, கேகாலையில் வசிப்பவர்களுக்கு தடுப்பூசி போட பயன்படுத்தப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1