ரித்திக் ரோஷன் இந்தி படங்களில் நடித்தாலும் இந்தியா முழுவதும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகைகள் இருக்கிறார்கள். ஹேன்ட்சம் ஹீரோவான ரித்திக் ரோஷன் சூசன் கானை காதலித்து கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்தார். அவர்களுக்கு ரிதான், ரிஹான் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் 2014ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
விவாகரத்திற்கு பிறகும் ரித்திக்கும், சூசனும் நட்பாக இருக்கிறார்கள். குடும்பமாக வெளிநாட்டிற்கு சென்று வருகிறார்கள். மேலும் லாக்டவுன் நேரத்தில் ரித்திக் தன் மகன்களை மிஸ் பண்ணக் கூடாது என்று அவர் வீட்டில் வந்து தங்கினார் சூசன். இதை எல்லாம் பார்த்தவர்கள் ரித்திக், சூசன் மீண்டும் சேரக்கூடும், திருமணம் செய்யக்கூடும் என்றார்கள்.
ரித்திக்குடன் சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூசன் கான் வாழ்வில் மீண்டும் காதல் வந்திருக்கிறது. பிக் பாஸ் 14 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அலி கோனியின் சகோதரரான நடிகர் அர்ஸ்லான் கோனியை சூசன் கான் காதலிக்கிறாராம். தயாரிப்பாளர் ஏக்தா கபூரின் பார்ட்டியில் தான் அர்ஸ்லானுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சூசன்.
ஆறு மாதங்களுக்கு முன்பு தான் அர்ஸ்லான் சூசனுக்கு பழக்கமானாராம். சின்னத்திரை நண்பர்கள் மூலம் சந்தித்திருக்கிறார்கள். நட்பாக பழகிய அவர்கள் தற்போது காதலிக்கிறார்களாம். சூசன் கான் அர்ஸ்லானை காதலிக்கிறார் என்பதை ரித்திக் ரோஷனின் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவர்களுக்கு இந்த காதல் விவகாரம் அதிர்ச்சி அளித்திருக்கிறது.