கர்ப்பிணிக்கு குழந்தை பிரசவிக்கும் நேரம் தாய்ப்பால் குறையில்லாமல் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Date:

 

குழந்தையின் வளர்ச்சி 36 வது வாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் 30 கிராம் அளவு எடை அதிகரிக்க கூடும் நாள் முழுவதும் சாப்பிடும் அனைத்து அற்புதமான ஊட்டச்சத்து உணவுகளிலிருந்தும் இதன் எடை அதிகரிக்கலாம். குழந்தையை மூடி பாதுகாத்த மெழுகு போன்ற பொருள் தேய்ந்துவிட்டது. குழந்தையின் மண்டை எலும்புகள் இன்னுமிணைக்கப்படவில்லை என்பதால் குழந்தை வெளியேறும் வழி எளிதாக இருக்கும்.

குழந்தை ஒன்றரை அடி வரை இருக்கும். வாரங்கள் செல்ல செல்ல அது வளர்ந்து இடத்தை ஆக்ரமித்து வருகிறது. குழந்தையின் எடை 2. 7 கிலோ வரை இருக்கலாம். உடல் நிரம்பி குழந்தை எடை அதிகரிப்பதால் சுருக்கங்கள் இழக்கிறது. குழந்தை தலைகீழாக நகரும் வாய்ப்பு உள்ளது.

சில குழந்தைகள் திரும்ப முடியாமல் இருக்கலாம் இது ப்ரீச் குழந்தைகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த குழந்தைகள் சுகப்பிரசவமாக பிறக்கலாம் என்றாலும் குழந்தை பிரசவ வலி வரை திரும்பாமல் இருந்தால் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

​கர்ப்பத்தின் 36 வாரத்தில் கர்ப்பிணிக்கு உடலில் உண்டாகும் அறிகுறிகள்!

இனி குழந்தை வளர இடமிருக்காத அளவு வயிற்றில் சிக்கல் இருக்கலாம். இந்த 36 வது வாரத்தில் குறைந்தது 24 முதல் 36 பவுண்டுகள் அதாவது 11 முதல் 16 கிலோ வரை அதிகரித்திருக்கும். இது சாதாரணமானது. முகம், கைகள், கணுக்கால் மற்றும் பாதங்களில் வீக்கம் அல்ல்து திடீர் எடை அதிகரிப்பை கவனித்தால் மருத்துவரை அழைக்கவும்.

இது ப்ரீக்ளாம்ப்சியாவை குறிக்கலம். இது யர் இரத்த அழுத்தம், கை மற்றும் கால்களில் வீக்கம் மற்றும் சிறுநீரில் அதிக அளவு புரதத்துக்கு வழிவகுக்கும் கர்ப்ப சிக்கல் ஆகும். இதற்கு உடனடி மருத்து கவனிப்பு தேவை.

36 வது வாரத்தில் கர்ப்பிணிக்கு உண்டாகும் அறிகுறிகள்!

உண்மையான பிரசவத்துக்கு முன் வரக்கூடிய சுருக்கங்களின் நிகழ்வாக இது இருக்கலாம். இது பிராக்ஸ்டன் ஹிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இது குழந்தையின் வருகையை முன்கூட்டியே அறிவிக்க கூடிய நிகழ்வு ஆகும். மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், வாய்வு மற்றும் பிற அறிகுறிகள் மூன்றாம் மூன்று மாதங்களில் நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கும் ஒன்று தான்.

மார்பக கசிவு : இந்த காலத்தில் மார்பகங்களில் மெல்லிய மஞ்சள் நிற திரவம் கசிவதை நீங்கள் அனுபவிக்கலாம். இந்த திரவம் கொலஸ்ட்ரம் என்று அழைக்கப்படுகிறது. இது முதல் சில நாட்களில் குழந்தைக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது.

சுருக்கங்கள்: குழந்தை முன்கூட்டியே பிறக்க முடிவு செய்திருந்தால் சுருக்கங்கள் குறித்து அறிவது அவசியம். இது கருப்பையை இறுக்குவது போல் உணர்கின்றன. சில சமயங்களில் பின்புறத்திலும் மாதவிடாய் பிடிப்புகள் போல உணர்கின்றன. இது தவறான உழைப்பு காரணத்தாலும் இவை நேரலாம். சிறுநீர் கழிப்பது: அடிக்கடி சிறுநீர் கழிப்பது குழந்தை இடுப்பில் இறங்குவதால் அழுத்தம் அதிகரிக்கும். இந்த கட்டத்தில் இது மோசமானதாக இருக்கும். இது தவிர நெஞ்செரிச்சல் மற்றும் பொதுவான சோர்வு ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும். இந்த நேரத்தில் வயிற்றில் அரிப்பு அதிகமாக இருக்கும். ஹார்மோன்கள் எழுச்சியுடன் இணைந்து தோல் வறண்டு சங்கடமாக இருக்கும். தொடர்ந்து ஈரப்பதமாக வைத்திருப்பதன் மூலம் இந்த அரிப்பை குறைக்கலாம். கட்டுப்படுத்தலாம்.

​36 வாரத்தில் கர்ப்பிணிகள் என்ன சாப்பிடலாம்

கர்ப்பத்தின் 36 வது வாரத்தில் உணவு தேர்வுகள் கூடுதல் கவனமாக இருக்கலாம். ஆனால் கவலை, பயம் காரணமாக பெரும்பாலானோர் இது குறித்து கவலை கொள்வதில்லை. எனினும் குழந்தை சரியான எடையை பெறவும். தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் ஆரோக்கியமான உணவு அவசியம்.
பிடித்த உணவு சாப்பிடுவது இப்போது கடினமாக இருக்கலாம். எனினும் அத்தியாவசிய உணவை பெறுவதற்கு 5 முதல் 6 சிறிய உணவுகளாக பிரித்து குழந்தைக்கு கொடுக்கலாம். திரவங்களை குடிப்பதன் மூலம் ஈரப்பதமாக இருக்கலாம். பிரசவத்துக்கு உடலை தயாராவதற்கு காற்றோட்ட அளவை பராமரிக்க இது அவசியம்.

 

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவிற்கு ஆடு கடத்தியவர்கள் சிக்கினர்

இலங்கை கடற்படையினர் நேற்று (09) புத்தளம், உச்சமுனைக்கு அப்பால் உள்ள கடல்...

தட்டம்மை பரவல்: 3 சிறைச்சாலைகளிலிருந்து கைதிகள் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படவில்லை!

தட்டம்மை நோய் பரவல் காரணமாக, மூன்று சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை இன்று...

பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க முறையான தகுதியுடைய ஆசிரியரல்ல: புதிய குற்றச்சாட்டு!

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, பல்கலைக்கழகம், தேசிய கல்விக்கல்லூரி அல்லது ஆசிரியர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்